"இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். 'துருவங்கள் பதினாறு', 'பாடம்', 'மணியார் குடும்பம்' என பல படங்களில் நடித்திருந்தாலும், எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை. 'நோட்டா', 'கழுகு 2', 'ஜாம்பி' படங்கள் யாஷிகாவிற்கு ஓரளவுக்கு பெயர் பெற்றுத் தந்தது.

 

விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற யாஷிகா ஏகப்பட்ட புகழுக்கு சொந்தக்காரராக மாறினார். ரசிகர்கள் தன்னை மறந்துவிடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

கவர்ச்சியில் எல்லை தாண்டிய யாஷிகா, கண்கூசும் அளவிற்கு சோசியல் மீடியாவில் ஷேர் செய்யும் புகைப்படங்கள் நெட்டிசன்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. ஓவர் கிளாமரில் யாஷிகா போடும் போட்டோவை பார்க்கும் நெட்டிசன்கள், கமெண்ட்ஸில் தாறுமாறாக திட்டி வந்தனர். 

இதனால் நம்ம யாஷிகா ஆனந்த் திடீர் அடக்க ஒடுக்கத்திற்கு ஷிப்ட் ஆகிவிட்டார். வெள்ளை நிற புடவையில் தலையை சாய்த்து வெட்கப்படும் படியான போட்டோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

யாஷிகாவின் வெட்கத்தில் சொக்கிய நெட்டிசன்கள் இந்த பெண்ணிடம் இப்படி ஒரு அடக்கமா என திண்டாடி போயுள்ளனர். புடவையிலும் கண்களை உறுத்தாத வகையில் கிளாமர் போஸ் கொடுத்துள்ள யாஷிகாவின் புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.