தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பிரச்சனைகளை விட வனிதா, பீட்டர் பாலை 3வது திருமணம் செய்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. கடந்த 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை வனிதா 3வது முறையாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னரே பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து பிள்ளைகள் இருப்பது வெளியே வந்தது. 

 

 

இதையும் படிங்க: இளையராஜா மகனுக்கே இப்படியொரு நிலையா?... மதமாற்றம் வரை யுவனை தள்ளியது இதுதானாம்...!

கடந்த வாரம் முழுவதும் யூ-டியூப்பில் பீட்டர் பாலின் முதல் மனைவியான ஹெலனும், தற்போதைய மனைவியான வனிதாவும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறிவந்தனர். அந்த பஞ்சாயத்து எல்லாம் கொஞ்சம் தணிந்து, அவர்களே சட்டப்படி பிரச்சனையை சந்திக்கலாம் என சென்றுவிட்டனர். ஆனால் ஹெலனுக்கு சப்போர்ட் செய்வதாக கூறி வனிதாவிற்கு அட்வைஸ் செய்த லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி, தயாரிப்பாளர் ரவீந்தர் என பலரும் வனிதாவிடம் வாங்கி கட்டிக்கொண்டனர். 

 

இதையும் படிங்க: நம்ம சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது?.... ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அழகில் மெருகேறிய போட்டோஸ்...!

இப்போது புதிதாக அந்த வரிசையில் சேர்ந்திருப்பது சூர்யா தேவி என்ற பெண், இவர் தேவையில்லாமல் வனிதாவின் 3வது திருமணம் குறித்து யூ-டியூப்பில் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார். வனிதா, பீட்டர் பால், வக்கீல் ஸ்ரீதர் என அனைவரை பற்றியும் மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார். ஏற்கனவே தனது 3வது திருமணம் குறித்து அவதூறாக பேசுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வனிதா விஜயகுமார் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

 

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன், அவருடைய மனைவியுடன் இருக்கும் சின்ன வயசு போட்டோ... இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்...!

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக சூர்யா தேவி மீது வனிதா விஜயகுமார் புகார் அளித்துள்ளார். வக்கீலுடன் போரூர் எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலையத்தில் வனிதா புகார் கொடுத்துள்ளார். அதில் சூர்யா தேவி தன்னைப் பற்றியும், தனது திருமணம் குறித்து அவதூறாக பேசிவருவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார். சூர்யா தேவி ஏற்கெனவே தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து அவதூறு பேசியதற்காக சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யபட்டுள்ளதாக வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.