பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்தவர் சாண்டி. பிரபல நடன கலைஞரான சாண்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் ரசிகர்களை பெற்றார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த சாண்டி, தனது குரு கலா மாஸ்டரை முதலில் சந்தித்தார். அதன் பின்னர் அவர் சந்தித்த முக்கியமான நபர் நம்ம லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு. அப்போது சாண்டிக்கு சிம்பு புத்தகம் ஒன்றை பரிசளித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

தற்போது மாநாடு படத்தில் நடிக்க உள்ள சிம்பு, ஹன்சிகா நடித்து வரும் மஹா படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார். மேலும் கெளதம் கார்த்திக் உடன் மஃப்டி என்ற ரீமேக் படத்திலும் நடிக்க உள்ளார். கால்சீட் சொதப்பல்களை முட்டை கட்டி வைத்துவிட்டு, மீண்டும் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நோக்குடன் அடுத்த ரவுண்டுக்கு களம் இறங்கியுள்ளார் சிம்பு. 

View this post on Instagram

Game starts with thalaivan 🔥 @kalaiyarasananbu @iam_str

A post shared by SANDY (@iamsandy_off) on Nov 28, 2019 at 7:28am PST

இந்நிலையில் நடிகர் சிம்பு மற்றும் கலையரசனுடன் சாண்டி எடுத்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாண்டி, தலைவன் உடன் ஆட்டம் ஆரம்பம் என பதிவிட்டுள்ளார்.