பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற சாக்‌ஷி, சமீபத்தில் செய்த காரியம் ஒன்று சோசியல் மீடியாவை அதிரவைத்தது. எந்த நடிகையும் செய்யத் துணியாத வகையில், முதன் முறையாக யானையுடன் நின்று தைரியமாக போட்டோ ஷூட் நடத்தியிருந்தார் சாக்‌ஷி அகர்வால். பசுமையான காட்டில், ராஜா என்ற கம்பீரமான யானையுடன் சாக்‌ஷி எடுத்த போட்டோக்கள் ஒவ்வொன்றும் சோசியல் மீடியாவில் வெற லெவலில் வைரலானது. நயாப் என்ற காலண்டருக்காக ஃபேஷன் டிசைனர் ஃபைசாகான் டிசைன் செய்த அட்டகாசமான போட்டோஷூட் லைக்குகளை குவித்து வருகிறது.

இந்த காலண்டருக்கான வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. பிரித்விராஜ், அதுல்யா ரவி, நமீதா உள்ளிட்டோர் பங்கேற்ற அந்த விழாவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதத்திற்கான காலண்டர்களை வெளியிட்டனர். அந்த காலண்டர் புகைப்படங்கள் ஒவ்வொன்றிலும் ஃபைசாகான் வடிவமைத்த வண்ண, வண்ண உடையில் அசத்தலான போஸ் கொடுத்திருந்தார் சாக்‌ஷி அகர்வால். 

இந்நிகழ்ச்சியில் பேசிய பேஷன் டிசைனர் ஃபைசாகான் போட்டோ ஷூட்டின் போது அனுபவித்த கஷ்டங்களையும், காடுகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே ஆலப்புழாவில் உள்ள அடந்த காட்டில் போட்டோ ஷூட் நடத்தியதையும் கூறினார். மேலும் யாரும் எதிர்பாராத வகையில், சாக்‌ஷி அகர்வால் அணிந்துள்ள வண்ண, வண்ண உடைகளுக்கு என பிரத்யேக கான்செப்ட் இருப்பதையும் மேடையில் போட்டுடைத்தார். 

வருடத்தின் முதல் மாதமான ஜனவரி பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதை குறிக்கும் விதமாக சாக்‌ஷி கையில் விளக்கினை ஏந்தி நிற்பதாகவும், அடுத்த மாதமான பிப்ரவரி காதலர்களுக்கு ஏற்ற மாதம் என்பதால் அடர் சிவப்பு நிறத்தில் உடையணிந்து இருப்பதாகவும் சாக்‌ஷி அணிந்துள்ள அல்டரா மார்டன் உடைகளுக்கு பின்னால் உள்ள ரகசியத்தை பகிர்ந்துகொண்டார்.

 

விதவிதமான தீம் வைத்து, சிவப்பு, மஞ்சள், நீலம், வெள்ளை, கறுப்பு என விதவிதமான உடைகளில் கலக்கலாக போஸ் கொடுத்துள்ள சாக்‌ஷியின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.