big boss contestent cheeting vaiyapuri

பிரபல தொலைக்காட்சியில் கடந்த வருடம் ஒளிபரப்பாகி பலரது கவனத்தை ஈர்த்த ஒரு நிகழ்ச்சி என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியை கூறலாம். இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

பிக் பாஸ் கொடுத்த வாய்ப்பு:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விளையாடிய, பிரபலங்கள் ஒரு சிலர் மக்களிடம் நெகடிவ் விமர்சனங்களைப் பெற்றாலும் பின் அந்த கோபங்கள் மறைந்து அனைவரையும் ஏற்றுக்கொண்டனர் ரசிகர்களும் பொதுமக்களும்.

வருத்ததுடன் புலம்பும் வையாபுரி:

இந்நிலையில் இதே நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விளையாடியவர் விஜய், அஜித்... உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் வையாபுரி. இவர் இந்த நிகழ்ச்சியை விட்டு செல்லும் போது, "அண்ணே இந்த நிகழ்ச்சியை விட்டு நீங்கள் வெளியில் சென்றாலும் மீண்டும் நாம் அனைவரும் ஒன்றாக, ஒரே குடும்பமாக அவ்வபோது சந்திதுப்பேசலாம்" என்று இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விளையாடிய அனைவரும் கூறியுள்ளனர். ஆனால் வெளியில் சென்றவுடன் சொன்ன வார்த்தைகள் அனைத்தையும் மறந்து விட்டு, அவரவர் வேளையில் பிஸியாக இருகின்றனர், ஆசையாக பேசலாம் என நானே போன் செய்தால் கூட எடுப்பதில்லை என வருத்ததுடன் தெரிவித்துள்ளார் வையாபுரி.