பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து திடீரென சேரன் வெளியேற்றப்பட்ட சம்பவம் குறித்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில்,...சே !!!   Disappointed. Most manipulated show ever.எச்சே !!! என்று கதறல் கமெண்ட் ஒன்றைப் போட்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி. இன்னும் ரெண்டுவாரத்துல அவன் வெளிய வந்துருவான் என்று கஸ்தூரியால் கமெண்ட் அடிக்கப்பட்ட கவின் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி வரை தாக்குப்பிடிப்பதை கஸ்தூரியால் ஜீரணிக்க முடியவில்லை என்று தெரிகிறது.

தமிழ் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 91 நாட்களை கடந்திருக்கும் இப்போட்டியின் வெற்றியாளர் யார்? என்பது இன்னும் 9 நாட்களில் தெரிந்துவிடும்.இதற்கிடையே, நேற்றைய எப்பிசோட்டில் லொஸ்லியா மற்றும் சேரன் ஒன்றாக வெளியேற்றப்படுவது போல காட்டிய பிக் பாஸ் குழுவினர், இறுதியில் சேரனை மட்டுமே வெளியேற்றினார்கள். சேரன் வெளியேற்றப்பட்ட தகவல் ஏற்கனவே வெளியாகிவிட்டதால், கூடவே லொஸ்லியாவை வெளியேற்றிய நாடகம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

டாஸ்க்குகளில் சிறப்பான பர்பாமன்ஸ் செய்து கோல்டன் டிக்கெட் பெற்றிருக்கும் முகேன், இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்ட நிலையில், கவின், தர்ஷன், ஷெரீன், லொஸ்லியா, சாண்டி ஆகியோரில் இரண்டு பேர் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்ல இருக்கிறார்கள். அவர்கள் யார்? என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 பல முறை எலிமினேஷன் பட்டியலில் இருந்தாலும் ரசிகர்களின் ஆதரவோடு எஸ்கேப் ஆகி வரும் கவின், பல தவறுகளை செய்திருந்தாலும், நிகழ்ச்சிக்கு தேவையான கண்டெண்ட் கொடுக்கும் போட்டியாளராகவும் அவர் இருப்பதால் அவரை இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்ய பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், மற்றொரு இறுதிப் போட்டியாளராக தர்ஷன் அல்லது லொஸ்லியா இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.இறுதியாக கவின், முகேன் மற்றும் லொஸ்லியா ஆகிய மூன்று பேர் தான் இறுதிப் போட்டிக்கு செல்வார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. யார் வெளியேறப் போகிறார்கள் என்கிற குழப்பத்துடனேயே இதர போட்டியாளர்கள் விடை கொடுத்தனர். சேரன் வெளியேறுவதை அவர்களால் நம்ப முடியவில்லை. 

அடுத்து லியாவிடம் பேசிய சேரன்“என்னோட வெளியேற்றத்திற்கு ஒரு சரியான காரணம் இருக்கு. இன்னமும் கொஞ்ச நாள்தான் இருக்கு. நீ உன்னை ஃப்ரூவ் பண்றதுக்கு கிடைச்ச சரியான வாய்ப்பு. நல்லாப் பயன்படுத்திக்கோ. இந்த கொஞ்ச நாள்ல கஷ்டப்பட்டா அது வாழ்க்கை முழுவதும் கஷ்டப்படாம இருக்கறதுக்கு ஒரு காரணமா அமையலாம். இப்பயாவது உங்க அப்பா அம்மாவிற்காக விளையாடு. இந்த வெற்றி கிடைச்சா.. உன்னோட பல பிரச்சினைகள் போறதுக்கு அது காரணமாக இருக்கலாம்.” என்று தந்தை ஸ்தானத்தை நிருபித்துக்கொண்டேயிருந்தார்.

பின்னர் அகம் டிவி வழியே.. உள்ளே வந்தார் சேரன்‘நட்பு போன்ற உணர்வுகளை ஒதுக்கி விட்டு விளையாடுங்க. மத்ததை வெளில பார்த்துக்கலாம். மக்களிடம் ஏற்கெனவே பிரபலமான நபர்களைக் கூட வெளியேற்றி விட்டு அத்தனை பிரபலமில்லாத உங்களை மக்கள் தக்க வெச்சிருக்காங்கன்னா.. உங்க கிட்ட ஏதோவொரு ஸ்பெஷலான விஷயம் இருக்கு. அதற்கு மதிப்பு கொடுத்து விளையாடுங்க” என்பது போல் உபதேசம் தந்தார்.

“சீக்ரெட் ரூம்ல இருந்து வெளிய வந்ததுல இருந்து சாண்டி கூட ரொம்ப க்ளோஸ் ஆயிட்டேன். முதல்ல அவரை எனக்குப் பிடிக்காது. இப்ப நல்லாப் பழகிட்டோம். ஆள் ரொம்ப அப்பாவி.. பிளான் கூட எதுவும் போடத் தெரியாது. இதுக்கு மாஸ்டர் மைண்ட் கவின்தான்’ என்று ஜாலியாக சில விஷயங்களைப் பொதுவில் போட்டு உடைத்தார் சேரன்.“ஸாரி.. சார்.. லியாவையே பார்த்துட்டு இருந்ததால உங்களுக்கு சரியா விடை தரலே” என்று கவின் சொன்னதற்கு “அடேய்.. நீ தொன்னூறு நாளா அதைத்தாண்டா பண்ணிட்டு இருக்கே” என்று சேரன் சொன்னது ரசனையான காமெடி. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் இவர் கவின் - லாஸ்லியா ஜோடியைக் கண்காணித்துக்கொண்டேயிருப்பார் என்றே தோணுகிறது.

இந்நிலையில் சற்றுமுன்னர் வெளியான 92 வது நாளுக்கான புரோமோ வீடியோவில் ‘நீங்க அவரைக் காப்பாத்தணும்னா ஒரு பச்சை மிளகாயைச் சாப்பிடணும்’என்கிற டாஸ்க் லாஸ்லியாவுக்குக் கொடுக்கப்படுகிறது. அவர் தயங்கிக் தயங்கி பில்ட் அப் கொடுக்கவே ‘லாஸ்லியா கொஞ்சம் சீரியஸா இருக்கணும்’என்று மிரட்டுகிறார் பிக்பாஸ்.