Singer Bhavatharini : இசைஞானி இளையராஜாவின் மகளும், பிரபல படகியுமான பவதாரிணி கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

தமிழ் திரையுலகில் "ராசையா" என்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் நான் பவதாரிணி. தேசிய விருது பெற்ற இந்த பாடகி மிகப்பெரிய இசை குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. பெரும்பாலும் தனது தந்தை இளையராஜா மற்றும் சகோதரர் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவருடைய இசையிலேயே பெரிய அளவில் பாடல்களை பாடியவர் பவதாரணி. 

அவர் இறப்பதற்கு முன் புற்றுநோய்க்காக கடந்த நாட்களாக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி அவர் காலமானார். அடுத்த நாள் மாலை அவருடைய உடல் சென்னை கொண்டுவரப்பட்ட நிலையில், சென்னையிலிருந்து வாகனம் மூலமாக பண்ணைபுறம் எடுத்துச் செல்லப்பட்டது.

நண்பர் மேல் பாசம்.. மகளுக்கு ரஜினி என்று பெயரிட்ட நடிகர் - விஷ்ணு விஷாலுக்கும் அவருக்கும் என்ன உறவு தெரியுமா?

அங்கு ஏற்கனவே பவதாரினியின் பாட்டி மற்றும் அம்மா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் பவதாரணி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு அங்கே ஒரு மணிமண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் பிரேம்ஜி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

Scroll to load tweet…

இந்நிலையில் இளையராஜாவின் சகோதரரான பாஸ்கர் அவர்களுடைய மகள் வாசுகி பாஸ்கர் வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவில் பவதாரணி தன்னுடைய சரிபாதி என்று கூறி அவருடைய வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். வாழ்க்கையின் மறு புறத்தில் உன்னை சந்திக்கிறேன் என்று கூறிய அவர் நாங்கள் அனைவரும் உன்னை மிகவும் மிஸ் செய்கிறோம் என்றும் கூறியுள்ளார். மேலும் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவோடு இணைந்து பவதாரணி ஒரு இசை கச்சேரியில் பாடிய வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார் வாசுகி பாஸ்கர்.

மீண்டும் ஹீரோவாகும் "குட்டி பவானி".. ஜோராக நடந்த பூஜை.. நேரில் வந்து வாழ்த்திய சீமான் - லேட்டஸ்ட் கிளிக்ஸ்!