பாரதி ராஜாவுக்கு பணத்துக்கு வழியில்லையா.. யாருங்க சொன்னது.? மொத்தம் என் பணம், கொதித்த மனோஜ் பாரதிராஜா.

பாரதிராஜா பணத்திற்கு வழி இல்லாமல் மருத்துவமனையில் இருப்பதாக தவறான தகவல் வெளியாகி வருகிறது, தயவுசெய்து அதுபோன்ற தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என அவரின் மகன் மனோஜ் பாரதிராஜா கூறினார். 

Bharti Raja doesn't have access to money.. Who said? Totally my money,  Manoj Bharathiraja   Angry.

பாரதிராஜா பணத்திற்கு வழி இல்லாமல் மருத்துவமனையில் இருப்பதாக தவறான தகவல் வெளியாகி வருகிறது, தயவுசெய்து அதுபோன்ற தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என அவரின் மகன் மனோஜ் பாரதிராஜா கூறினார். அவருக்கு எனது சொந்த பணத்தில் சிகிச்சை அளித்து வருகிறேன் என்றும் அவர் கூறினார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஆர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்தார். இந்நிலையில் குணமடைந்து அவர் வீடு திரும்ப உள்ளார், முன்னதாக அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் மற்றும் அவரது மகன் மனோஜ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். முன்னதாக மனோஜ் கூறியதாவது:- எனது தந்தை பாரதிராஜாவின் உடல் நிலை நன்றாக உள்ளது, ஆரோக்கியமாக இருக்கிறார், மீண்டும் நீங்கள் பழைய பாரதிராஜாவை பார்க்கும் அளவிற்கு அவர் உடல்நலம் தேறி உள்ளது.

Bharti Raja doesn't have access to money.. Who said? Totally my money,  Manoj Bharathiraja   Angry.

ஏதோ அவர் பணத்திற்கு வழி  இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது, தயவுசெய்து அதுபோன்ற தகவல்களை பரப்ப வேண்டாம், என்னுடைய சொந்த பணத்தில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார், தொடர்ந்து பேசிய அவர், பாரதிராஜா இப்போது படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறார், எல்லாமே அவருக்கு சினிமா தான், சினிமாதான் அவருடைய மூச்சு சுவாசம் எல்லாம், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நான்கைந்து படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் திரைப் பிரபலங்கள் நிறைய பேர் நேரில் வந்து அவரை சந்தித்தனர். அவர் சிகிச்சையில் இருந்தபோதே அவர் நடித்த படங்கள் எல்லாம் போட்டுக் காட்டினார், மீண்டும்  திருச்சிற்றம்பலம் படம் பார்க்க வேண்டும் என அவர் கேட்டார், விரைவில் குணமடைந்து அவர் அனைவரையும் சந்திக்க உள்ளார் என்றார்,

அதை தொடர்ந்து பேசிய அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் சுவாமி  கண்ணு மற்றும் சபாநாயகம் கூறுகையில்,  
இயக்குனர் பாரதிராஜா நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவனைக்கு வந்தார். தற்போது அவர் முழு குணம் அடைந்திருக்கிறார், இன்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார், தொடர் பரிசோதனை மட்டும் தேவைப்படுகிறது.

Bharti Raja doesn't have access to money.. Who said? Totally my money,  Manoj Bharathiraja   Angry.

மீண்டும் ஐந்து நாட்கள் கழித்து அவர் பரிசோதனைக்கு வரவேண்டும், வயது முதிர்வு காரணமாக அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது, தற்போது அதுவம் சரி செய்யப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதால் விரைவில் குணம் அடைந்துள்ளார். 

திருச்சிற்றம்பலம் படம் மிகவும் பிடித்த படம் எனவும், அந்த படத்தை பற்றி பேசினால் அவர்கள் உற்சாகமாகி விடுவார் என்றும், அவர் நடித்த படத்தில் எந்த படம் பிடிக்கும் என்று கேட்டதற்கு அனைத்து படங்களும் என் குழந்தைகள் தான் என்றார், அதுமட்டுமின்றி டான்ஸ் ஆட தெரியுமா என ஒரு செவிலியரிடம் கேட்டு அவரே நடனமும் ஆடி காட்டினார், என மருத்துவர் கூறினார்.  
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios