சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள்.  அறிமுக இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நாளை ஒடிடி தளமான அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆகிறது.நேரடியாக ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கும் இப்படத்தில் ஜோதிகா முதல் முறையாக வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருப்பதோடு, பாக்யராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இதையும் படிங்க: ஆபாச படம் பார்த்த தமன்னா... ஜாலிக்காக நண்பர் வீட்டில் செய்த கேவலமான வேலை... வைரலாகும் வீடியோ...!

சமீபத்தில் யூ-டியூப்பில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் கோடிக்கணக்கான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், இன்று திரைத்துறை பிரபலங்களுக்காக பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளது. அதனை கண்டு ரசித்த பிரபலங்கள் பலரும் பொன்ம்கள் வந்தாள் திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர். ஜோதிகாவின் நடிப்பை பார்த்து பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 

இதையும் படிங்க: இளையராஜா மகனை இஸ்லாமிற்கு மாத்திட்டீங்களே?... யுவன் மனைவியை சீண்டிய நெட்டிசன்கள்...!

இந்நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான பாராதிராஜா அவர்கள் பொன்மகள் வந்தாள் திரைப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அரியாத வயதில் காமத்தை சுமந்து,வெளியில் சொல்லா முடியா வாழும்,பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்த பொன்மகள். இது பெண்களுக்கான படம் அல்ல,பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான இது ஒரு பாடம்..  இயக்குனரின் இயக்கமும்,ஜோதிகா அவர்களின் உணர்ச்சி் சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள் கண்களை கலங்கடித்து விட்டது. இந்த "பொன்மகள் வந்தாள்" கண்டிப்பாக சமூகத்தை கலங்கடிக்கும்... என்று உணர்ச்சிபூர்வமாக பாராட்டியுள்ளார்.