நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை மறைவை அடுத்து, பிரபல இயக்குனர் பாரதி ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை மறைவை அடுத்து, பிரபல இயக்குனர் பாரதி ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மட்டும் இன்றி, நடிகராகவும், இயக்குனராகவும் தமிழ் ரசிகர்களால் அறியப்படுபவர் சீமான். இவரது தந்தை செந்தமிழன் இன்று காலமானார். அவரது மறைவிற்கு, பல்வேறு அரசியல் கட்சியினர், பிரபலங்கள், மற்றும் பலர் தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் "தந்தையை இழந்து துயரத்தில் இருக்கும் சீமான் மற்றும அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தன்னுடைய இரங்கலை தெரிவித்திருந்தார். 

மேலும் தற்போது, என் பிள்ளை சீமானைப் பெற்றெடுத்த தந்தை திரு.செந்தமிழன் அவர்களின் மறைவு எங்களுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள். என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Scroll to load tweet…