கடந்த 10 ஆண்டுகளில் பரத் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் அவருக்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித்தரவில்லை. 
தொடர்ந்து, தோல்விப் படங்களாகவே கொடுத்து வரும் பரத், தற்போது மிகவும் நம்பியிருக்கும் படம் 'காளிதாஸ்'. 'நாளைய இயக்குனர்' புகழ் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில், முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக பரத் நடித்துள்ளார். 

அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அன் ஷீடல் நடித்துள்ளார். அவர்களுடன் இணைந்து ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். 


ஏற்கெனவே, இந்தப் படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், அதன்பிறகு படம் குறித்த எந்தவொரு அப்டேட்டும் வெளியாகமல் இருந்தது. 

இந்நிலையில், படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. போலீஸ் அதிகாரியாக பரத் அவதாரம் எடுத்திருக்கும் 'காளிதாஸ்' படத்தின் டிரைலரை, ஏற்கெனவே போலீஸ் அதிகாரிகளாக நடித்து மிரட்டிய நடிகர்கள் ஜெயம் ரவி, அருண்விஜய் ஆகியோர் வரும் நவம்பர் 9ம் தேதி வெளியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமூக அக்கறையுடன் கூடிய கதையுடன் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் 'காளிதாஸ்' படம், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் நீண்ட காலமாக ஒரு வெற்றிக்காக தவமிருக்கும் பரத்துக்கு, 'காளிதாஸ்' வேண்டிய வரத்தை கொடுக்குமா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.