தங்கள் வீட்டில் வேலை பார்க்கும் 14 வயது சிறுமியை நடிகை பானுப்ரியாவும் அவரது சகோதரரும் அடிமைபோல் நடத்தியதாகவும் உடல் ரீதியான தொந்தரவுகள் தந்ததாகவும் சொல்லப்பட்ட புகாரை பானுப்ரியா மறுக்கிறார்.

ஆந்திராவைச் சேர்ந்த பிரபாவதி என்ற பெண், சந்தியா[ 14 வயது] என்கிற தனது மகளை நடிகை பானுப்ரியாவும், அவரது சகோதரரும் அடிமைபோல் நடத்துவதாகவும், சம்பளம் தராமல் இழுத்தடிப்பதாகவும் மேலும் உடல் ரீதியாகத் துன்புறுத்துவதாகவும் போலீஸில் புகார் செய்திருந்தார். அதே போல் தன் மகளை சந்திக்கவிடாமல் பானுப்ரியா சதி செய்வதாகவும் பத்மாவதி கூறியிருந்தார்.

இச்செய்தி நேற்று மீடியாக்களில் பெரும்பரபரப்பு ஆன நிலையில், பாதிக்கப்பட்ட சந்தியாவை நடிகை பானுப்ரியா, புகார் செய்யப்பட்ட காவல் அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைத்ததாகவும், அவர்களிடம் சந்தியா பானுப்ரியாவோ அவரது சகோதரரோ தன்னைத்துன்புறுத்தவோ, வீட்டுக்காவலில் வைக்கவோ இல்லை என்று வாக்குமூலம் அளித்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து தனது தரப்பு நியாயத்தை எடுத்துச்சொல்வதற்காக விரைவில் அச்சிறுமியுடன் நடிகை பானுப்ரியா பத்திரிகையாளர்களைச் சந்திக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.