Bhagyaraj-Aishwarya: 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் ஜோடி...! அட.. ஹீரோ யார் தெரியுமா..?
Bhagyaraj-Aishwarya: நடிகர் பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி, 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைகிறது. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.
கணேஷ் பாபு இயக்கத்தில், கவின் நடிக்கும் புதிய படம் ஒன்றில், கவினின் பெற்றோராக நடிகர் பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா நடிக்கின்றனர்.
தமிழ் திரையுலகின் 90 களில், முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் நடிகர் பாக்யராஜ். அந்த கால கட்டத்தில் இவரது பெரும்பாலான திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றி படங்களாக அமைத்தன. இதையடுத்து, நடிகர் சங்க தேர்தல் உள்ளிட்ட பணிகளில், பிஸியான இருந்த இவர் ஒரு சில படங்களில் குணசித்திர வேடங்களில் மட்டும் நடித்து வந்தார்.
பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி:
இந்நிலையில், தற்போது ஒலிம்பியா மூவீஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்த படத்தில் பாக்யராஜ் ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்க உள்ளார்.
கவின் மற்றும் பீஸ்ட் நடிகை அபர்ணா:
கணேஷ் பாபு இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் கவின் நாயகனாக நடிக்க உள்ள இந்த திரைப்படத்தில், பீஸ்ட் நடிகை அபர்ணா தாஸ் நாயகியாக நடிக்க உள்ளாராம். கவினின் பெற்றோராக நடிகர் பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா நடிக்கின்றனர். மேலும், இந்த படத்தினை ஒலிம்பியா மூவிஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
30 ஆண்டுகளுக்கு பிறகு சேர்ந்த ஜோடி:
படத்தின் படப்பிடிப்பு துவங்கிய உள்ள நிலையில், அவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. கடந்த 1992ஆம் ஆண்டு வெளியாகி ராசுகுட்டி என்ற படத்தில் இந்த ஜோடி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 30 ஆண்டு கால நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.