இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரும் பத்ம பூஷன், தாதா சாகேப் விருதுகள் பெற்றவருமான மிருனாள் சென் இன்று காலை 10.30 மணி அளவில் கொல்கட்டாவில்  காலமானார். அவருக்கு வயது 95.

‘மிருகயா’ படத்தின் மூலம் உலகம் முழுமையும் அறியப்பட்ட மிருனாள் சென் 1955ம் ஆண்டு ‘ராத் போர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மலைவாழ் மக்களை முதலாளிகள் எப்படி சுரண்டு கொழுக்கிறார்கள் என்று தத்ரூபமாகக் காட்டப்பட்ட மிருகயா படத்தில் தான் மிதுன் சக்கரவர்த்தி அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகுணர்ச்சிக்கு முதலிடம் தந்து தத்துவ விசாரணைகளை படமாக்கி வந்த சென் 12க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றவர். பெங்காலி இந்தி மொழிகளில் அதிகப்படங்கள் இயக்கிய சென் ‘ஒக ஊரி கதா என்ற ஒரே ஒரு தெலுங்குப் படத்தையும் இயக்கியுள்ளார்.

 இவரது மறைவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி...மிருனாள் சென்னின் மறைவு செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். அன்னாரது இழப்பு திரையுலகுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.