நடிக்க வாய்ப்பு கேட்டால், படுக்கைக்கு அழைக்கிறார்கள் என குற்றஞ்சாட்டிய பிரபல நடிகை, டுவிட்டரில் இருந்து விலகிய சம்பவம், அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாயாஜாலம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகிய நடிகை பூனம் கவுர், தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன், நெஞ்சிருக்கும் வரை, வெடி, நாயகி உள்ளிட்ட படங்களில் நடித்த அவரால், கோலிவுட்டில் பெரிய அளவுக்கு மார்க்கெட்டை பிடிக்க முடியவில்லை. இதனால், தான் அறிமுகமான தெலுங்கு பட உலகிலேயே தஞ்சமடைந்த அவர், பல திரைப்படங்களில் நடித்து, ராசியான நடிகையாக வலம்வருகிறார். இதனால், அவர் அடிக்கடி கிசுகிசுக்களில் சிக்கி வருவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், தெலுங்கு பட உலகில் நடிக்க வாய்ப்பு கேட்டால், படுக்கைக்கு அழைப்பது வாடிக்கையாக உள்ளது என பரபரப்பை கிளப்பிய பூனம், திரைப்படத்துறையில் பாலியல் தொல்லைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். இந்நிலையில், ஆபாச இணையதளம் ஒன்றில் தம்மை பற்றி மோசமாக எழுதப்பட்டுள்ளதாகவும், அதற்கு பிரபல இயக்குநர் ஒருவரே காரணம் என்றும் குற்றஞ்சாட்டிய நடிகை பூனம் கவுர், திறமையில்லாத அந்த இயக்குநருக்கு தயாரிப்பாளர் எப்படி வாய்ப்பு கொடுத்தார் என்று தெரியவில்லை என்றும் கிண்டல் அடித்தார்.மேலும், ஆபாச இணையதளத்துக்கு குறிப்பிட்ட அந்த இயக்குநரே பணம் கொடுப்பதாகவும், அவர்கள் தன்னை பற்றி எழுதிய கதை மிகவும் அருமையானது என்றும் கூறிய நடிகை பூனம் கவுர், அந்த இயக்குநர் வேண்டுமானால், நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் காலில் விழுந்து கிடக்கலாம், ஆனால் என்னால் அவ்வாறு இருக்க முடியாது என்றும் தெரிவித்து இருந்தார். நடிகை பூனம் கவுரின் இந்த கருத்தால், அவருக்கு சமூகவலைதளங்கள் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்ந்து கொலை மிரட்டல் வந்ததாகவும், சிலர் ஆபாசமாக வசைபாடியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நடிகை பூனம் கவுர், டுவிட்டர் வலைதளத்தில் இருந்து விலகப் போவதாக தெரிவித்துள்ளார். சமூகவலைதளத்தை பயன்படுத்துவதால், தேவையற்ற குழப்பமும், மோசமான மனநிலையும் ஏற்படுவதாக குறிப்பிட்ட அவர், தீவிர யோசனைக்குப் பிறகே இந்த முடிவை எடுத்ததாகவும், திரும்பி எப்போது டுவிட்டருக்கு வருவேன் என்பது தெரியாது என்றும் ரசிகர்களுக்கு கூறியுள்ளார். ஏற்கனவே வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்க வருகிறாரா? என்று வெளிப்படையாகவே நடிகர்களும், தயாரிப்பாளர்களும் கேட்பதால் தான் நொந்து போய் உள்ளதாக பூனம் கவுர் தெரிவித்துள்ளார்.ஒருவர் இருவர் அழைத்தால் சரி என்று அவர்களை தவிர்த்து வேறு சிலரை நாடலாம், ஆனால் நான் சந்திக்கும் அனைவருமே என்னை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். இதனால் சிறிது காலம் நான் யாருடனும் தொடர்பு இல்லாமல் தனிமையில் இருக்க விரும்புகிறேன் என்று பூனம் கவும் தெரிவித்துள்ளார். நடிகை பூனம் கவுரின் இந்த அறிவிப்பால், அவரை டுவிட்டரில் பின் தொடர்ந்த ஏராளமான ரசிகர்கள், வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.