because of this reason the actress refuse to act in that serial
பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா. இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்தி வழங்கிவந்தார். பல சின்னத்திரை சீரியல்களில் நடித்தும் வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் விஜய் தொலைக்காட்சியில், மிஸஸ்.சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். அதன் பிறகு ”நெஞ்சம் மறப்பதில்லை” சீரியலில் நடித்து வந்தார்.
அந்த சீரியல் தொடங்கும் போது ,நிஷாவும் அந்த கதையில் வரும் ஒரு கதாநாயகி என்பது போல தான் காட்டினார்கள்.ஆனால் போகப் போக அவரது வேடம் வில்லி கதாப்பாத்திரமாக இருந்தது. இதனால் நிஷா அந்த சீரியலை விட்டு விலக தீர்மானித்து விலகிவிட்டார்.
பலரும் நிஷா நெஞ்சம் மறப்பதில்லை சீரியலை விட்டு விலகியது ஏன்? என கேள்வி எழுப்பி இருந்தனர். சமீபத்தில் ஒரு பேட்டியின் போது பேசிய ”நெஞ்சம் மறப்பதில்லை” சீரியல் நாயகன் அமீத் பார்கவ் இது குறித்து பேசும் போது, நானும் நிஷாவும் நல்ல நண்பர்கள்.
தொடக்கத்தில் இந்த சீரியலில் நாயகி கதாப்பாத்திரம் என தான் நிஷா நினைத்தார் . பிறகு ரோல் வில்லியாக இருந்ததால், அவருக்கு அளிக்கப்பட்ட கேரக்டர் நிஷாவிற்கு பிடிக்கவில்லை. அதனால் தான் சீரியலை விட்டு விலகினார் என தெரிவித்திருக்கிறார்.
