நாளை வெளியாகவுள்ள பீஸ்ட் படதிலிருந்து திக் திக் நிமிடங்களை கிளப்பும் ப்ரோமோக்கள் அடுத்தடுத்தது வெளியான வண்ணம் உள்ளது.
நாளை முதல் பீஸ்ட் கொண்டாட்டம் :
நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் நாளை உலகம் முழுதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. டிக்கெட் முன்பதிவு, ப்ரோமோஷன் வேலைகள் என ஒரு வாரத்திற்கு முன்பே பீஸ்ட் பீவர் பற்றி கொண்டது. அதோடு திரையரங்குகள் விஜய் பேனர்களால் நிரப்பட்டுள்ளது.
5 மொழிகளில் வெளியாகும் படம் :
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகி உள்ள பீஸ்ட் படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு பாதிப்புகள் மட்டுமே மற்ற உலக நாடுகளில் திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கு நாயகி :
விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நாயகி பூஜ ஹெக்டேவும் இவர்களுடன் ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சதீஷ் ஆகியோரும் உள்ளனர். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.
ட்ரைலர் ரிலீஸ் :
முன்னதாக வெளியான அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்களின் வெற்றியை தொடர்ந்து ட்ரைலர் வெளியானது. ஆக்ஷன் சீக்வன்ஸ் நிறைந்த இந்த முன்னோட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இதையடுத்து பட ரிலீஸ் நெருங்குவதால் ஒவ்வொரு நாளும் புதுப்புது ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ முழுக்க ஆக்ஷன் வெறி தெறிக்கிறது. புல்லட் சத்தம், கத்தி குத்து என ரத்தம் பீச்சியடிக்கும் காட்சிகள் இதில் இடம்பிடித்துள்ளது.
