டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பீஸ்ட். விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ (Arabic kuthu) என்கிற பாடல் வருகிற பிப்ரவரி 14-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அனிருத் பாடி உள்ள இப்பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான இப்பாடலின் புரோமோ வீடியோ வைரல் ஆனது.

அரபிக் குத்து பாடல் நாளை வெளியாக உள்ள நிலையில், பீஸ்ட் படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே ஆகியோர் புது தோற்றத்தில் இருக்கும்படியான புகைப்படம் இடம்பெற்று உள்ளது. இந்த போஸ்டரைப் பார்த்து குஷியான விஜய் ரசிகர்கள், அதனை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.