Beast Update :  நெல்சன், சிவகார்த்திகேயன், அனிருத் காம்போவில் பீஸ்ட் படத்தின் ஓப்பனிங் பாடலுக்கான மேக்கிங் ஷூட், சமீபத்தில் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பீஸ்ட். விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், பீஸ்ட் படம் குறித்த மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது..அதாவது நெல்சன் - சிவகார்த்திகேயன் - அனிருத் காம்போவில் பீஸ்ட் படத்தின் ஓப்பனிங் பாடலுக்கான மேக்கிங் ஷூட், சமீபத்தில் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சூட்டிங்கில் விஜய் கைபேசியில் பேசுவது போல மட்டும் கட்டப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.. எதுவாக இருந்தாலும் வியாஜியின் ஓப்பனிங் சாங் வெளியாகவுள்ள குஷியில் இருக்கின்றனர் ரசிகர்கள் ...

ஏற்கனவே டாக்டர் படத்தின் பாடலுக்கான லிரிக் வீடியோக்களின் ஆரம்பத்தில், மூவரும் இணைந்து அடிக்கும் லூட்டியும் மிகப் பெரிய அளவில் வைரலாகியிருந்தது. தற்போது, விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' திரைப்படத்திலும், அப்படி ஒரு காம்போ உருவாகியுள்ளதால், முதல் பாடல் எப்போது வெளிவரும் என்பதை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.