baywatch movie issue

நடிகை 'பிரியங்கா சோப்ரா' மற்றும் 'ராக்' ஆகியோர் நடித்து கடந்த 25 ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற ஹாலிவுட் திரைப்படம் 'பே வாட்ச்'.

இந்த திரைப்படத்தி அளவுக்கு அதிகமாக செக்சியாக நடித்துள்ளார் 'பிரியங்கா சோப்ரா' அதனால், சமீபத்தில் யாரும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு இந்த படத்தை வந்து பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

இந்நிலையிலில் ஆபாச காட்சிகள் இடம்பெறுவதால், தணிக்கை குழுவினர் இந்த படத்திற்கு 'எ' சான்றிதழ் வழங்கினர். 

ஆனால் படத்தின் போஸ்டரில் இது' எ 'சான்றிதழ் பெற்ற படம் என்று குறிப்பிடவில்லை என்று கூறி, அரவிந்த் என்கிற நபர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை அவரச வழக்காக ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இன்று மதியம் 2 :15 மணிக்கு விரைந்து விசாரிக்கவுள்ளது.