bavana left behind famous actress
நடிகை பாவனா:
பிரபல மலையாள நடிகையான பாவனா, கடந்த 2006 ஆம் ஆண்டு 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தன்னுடைய அழகினாலும், சிங்கப்பல் சிரிப்பினாலும் அனைவருடைய மனதையும் கவர்ந்தார். இதை தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் அஜித், ஜெயம்ரவி, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல்:
நடிகை பாவனா கடந்த சில வருடங்களாக பிரபல தயாரிப்பளார் நவீன் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்களுடையை திருமண நிச்சயதார்த்தம் கடந்த வருடம் மார்ச் மாதம் மிகவும் எளிமையான முறையில் பாவனா வீட்டில் நடந்தது.

திருமணம்:
இந்நிலையில் நேற்றைய தினம் இவர்களுடைய திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. இதை தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. இதில் மலையாள திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நடிகையை தள்ளிவிட்ட பாவனா:
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், பாவனாவுடன் ஒரு சில படங்களில் பணியாற்றிய துணை நடிகை ஒருவர் கலந்துக்கொண்டு, பாவனாவின் தோல் மீது கையை போட்டு வாழ்த்து சொல்ல வந்தார். அதற்கு பாவனா அவரது கையை தோலில் இருந்து தள்ளி விட்டார். 
மீண்டும் அந்த நடிகை அவர் மீது கையை வைக்க மிகவும் வலுவாக அவரை தள்ளி, கோவத்தில் கத்தினார். இந்த வீடியோ காட்சி தற்போது மிகவும் வைரல் ஆகி வருகிறது.
