மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக நடித்தவர் பாவனா, தற்போது மலையாள படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், பாவனா அவருடைய கார் ஓட்டுனரால் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் ஒட்டு மொத்த திரையுலகினரும் அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் விரைந்து செயல்பட்டு கைது செய்து குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.  

இதை தொடர்ந்து, பாவனாவிற்கு ஏற்பட்ட கொடுமைக்கு ,  பின்னால் யார் இருப்பது என பல கேள்விகளை எழுப்பப்பட்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து  ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, பாவனாவை காரில் கடத்திய போது பல்சர் சுனிலுக்கு ஒரு பெண் போன் செய்து சில தகவல்களை கூறியிருந்ததாக தெரிகிறது.

இந்த தகவலை வைத்து, போலீசார் அந்த பெண் யார் என விசாரணை செய்து வருவதாகவும் விரைவில் அவரும் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.