இந்திய திரையுலகினர் அனைவரையும் சமீபத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் பிரபல நடிகையான பாவனாவை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய சம்பவம் தான்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கண்டு பிடிக்க வேண்டும் என , மலையால முன்னணி நடிகர்கள் அனைவரும் ஒன்று கூடினர், அவர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கமும் இணைத்து குரல் கொடுத்தது. 

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கேரள தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர் மார்ட்டின், வடிவால் சலீம், பிரதீப் ஆகியோர் கைது செய்யப்பட்டு இவர்கள் மீது பலாத்காரம், ஆள்கடத்தல் உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் மணிகண்டன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக கேரள போலீஸ் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது, அதே போல் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் பல முக்கிய புள்ளிகள் இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளதாகவும், அவர்களும் விரைவில் கைது செய்ய படுவார்கள் என கூறப்படுகிறது .