baloon director talking about jai

இயக்குனர் சினிஷ் இயக்கத்தில், ஹாரர் கலந்த காமெடி படமாக வெளியாகியுள்ளது பலூன். இதில் நடிகர் ஜெய் கதாநாயகனாகவும், அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் ஆகியோர் கதாநாயகியராகவும் நடித்துள்ளனர்.

மேலும் காமெடியில் கலக்கியுள்ளார் நடிகர் யோகி பாபு. ஹாரரை விட ஹியுமர் தான் படத்தை ரசிக்க வைத்துள்ளது எனலாம். தற்போது இந்த படம் திரைக்கு வந்து ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

ஆனாலும் இந்த படத்தை குறிப்பிட்ட நேரத்தில் வெளியிடாமல், பல வருடங்கள் கழித்து வெளியிட காரணம் இந்த படத்தின் ஹீரோ ஜெய் என கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் இயக்குனர் சினிஷ் ஸ்ரீதரன், ஜெய்யை எச்சரிப்பது போல்... 'AAA' படத்திற்கு சிம்புவிற்கு நடந்தது போன்ற பிரச்சனை உங்களுக்கும் வரக்கூடாது, எனவே நீங்களே தயாரிப்பாளரிடம் வந்து நஷ்டத்தை ஏற்றுக்கொண்டால் உங்களுக்கு பிரச்சனை இல்லை என்று எச்சரித்துள்ளார். 

Scroll to load tweet…