பிரச்சனை என்று வந்தால், ஆரியை முதலில் டார்கெட் செய்யும் பாலாஜி... வாக்கியம் சொல்லும் டாஸ்கில் மற்ற போட்டியாளர்கள் மனதில் எந்த மாதிரியான எண்ணம் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு, செம்ம மாஸ் காட்டியுள்ள புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

முதல் புரோமோவில்... எந்த ஒரு கருத்தை சொன்னாலும் அதற்க்கு எதிராக ஏதேனும் ஒரு கருத்தை கூறி வந்த, ரம்யா வாயை அடைக்க செய்தார் ஆரி என்பதை பார்த்தோம். இதை தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில்... தன்னையும், ஆரியையும் மட்டுமே கட்டம் கட்டி மற்ற போட்டியாளர்கள் குறை கூறுவதை புரிந்து உண்மையை புட்டு புட்டு வைத்துள்ளார் பாலாஜி.

ஆரி மற்றும் பாலாஜியின் சண்டையால் மற்றவர்கள் சரியாக விளையாட முடியாமல் போகிவிட்டது என ரியோ கூறினார். இதை தொடர்ந்து வந்தவர்களும், ஆரி மற்றும் பாலாவை மீது மட்டுமே பல்வேறு தவறுகள் இருப்பதாக சுட்டி காட்டினர்.

இந்த நிலையில் இதுகுறித்து பேச வந்த பாலாஜி, இந்த கேம் எப்படி போய்க்கொண்டு இருக்கின்றது என்றால் எனக்கும் ஆரிக்கும் பிரச்சனை, அதனால் எங்கள் இரண்டு பேர்களால் எல்லாருக்கும் பிரச்சனை என்று கேம் போய் கொண்டு இருக்கின்றது. வழக்கம்போல் நானும் அவரும் தான் இந்த வீட்டில் கெட்டவர்கள் என்பது அந்த கட்-அவுட்டை பார்த்தாலே தெரிகிறது.

ஒருசில நிகழ்வுகளை மட்டும் எடுத்து கொண்டு இந்த இடத்தில் இதுபோன்ற கருத்துக்களை பதிவு செய்வது போல் உள்ளது. இந்த சேஃப் கேம் என்பதை நானும் விளையாடவில்லை, கண்டிப்பாக அவரும் விளையாடவில்லை. இங்க சேஃப் கேம் விளையாடதது தான் நிறைய பேருக்கு இந்த இடத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் நானும் ஒருத்தன் என்று கூறினார். பாலாஜியின் இந்த பேச்சுக்கு ஆரி சல்யூட் அடித்து தன்னுடைய ஆதரவை தெரிவித்தார்.

பாலாஜியிடம் இருந்து இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பாராத ரம்யா மற்றும் ரியோ செம்ம அப்சட் ஆனது இந்த புரோமோவை பார்த்தாலே தெரிகிறது.