பிக்பாஸ் வீட்டில் அவ்வப்போது நடக்கும் பிரச்சனைகளுக்கு, போட்டியாளர்கள் உடனுக்குடன் மன்னிப்பு கேட்கா விட்டாலும், கமல் சுட்டி காட்டியதும், மன்னிப்பு கேட்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் எதற்கெடுத்தாலும் சண்டைக்கு எகிறும் பாலா, முதல் முறையாக இரண்டு பேரிடம் மனதார, மன்னிப்பு கேட்பதாக கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதுகுறித்த ப்ரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது. இதில்... முக்கியமாக நான் இருவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். முதலில் சாரி கேட்க வேண்டிய நபர் ஆரி அண்ணன். இரண்டாவது ரியோ பிரதர். நீங்கள் எல்லாம் வாழ்க்கையில எவ்வளவோ பார்த்து விட்டு வந்திருப்பீர்கள் நான் இனிமேல் தான் பார்க்கணும்.

எனக்கு அந்த அளவிற்கு தகுதி இருக்கா என தெரியவில்லை. இங்கு இருக்கும் பலர் கீழே இருந்து தான் மேலே வந்திருக்கிறோம். இங்க இருக்குற ஒவ்வொருவரையும் கை பிடித்து தூக்கி விடணும் என்பதை தவிர்த்து கீழே இழுத்தது போல் தோன்றியது என கூறி மனதார மன்னிப்பு கேட்கிறார்.

பாலா இன்றைய தினம் அனைவர் மத்தியிலும் பேசிய போது, அவர் ஸ்டேட்டர்ஜி என்பதை பயன்படுத்தாமல் உண்மையிலேயே மனதில் இருந்து இந்த வார்த்தைகள் வந்ததையும் பார்க்க முடிந்தது. எனவே பாலாவிடம் இப்படி பட்ட ஒரு குணமும் உள்ளதை தெரிய வைத்துள்ளது இன்றைய பேச்சு.