பிக்பாஸ் வீட்டில் இதுவரை, பாசம், பிரச்சனை, விவாதங்கள் மட்டுமே இருந்து கொண்டுருந்த நிலையில், மலர்ந்தும் மலராமல் இருந்த காதல், தற்போது பூக்க துவங்கியுள்ளது. நேற்றைய தினமே, பாலாஜிக்கு கேசரி ஊட்டி விட்டு காதலை வளர்த்த ஷிவானி இன்று பாலாஜி பக்கத்திலேயே செட்டில் ஆகி விட்டார் போல.

தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், மற்ற போட்டியாளர்கள் எல்லாம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க, ஷிவானி பாலாஜி மட்டும் ஒரே பெட்டில் அமர்ந்து காதலை வளர்த்து வருகிறார்கள். மேலும் இவரைகளை டார்கெட் செய்து மற்ற ஹவுஸ்மேட்ஸ் பாடல் பாடுவதும் வெளியாகியுள்ளது.

குறிப்பாக ’மன்மதராசா’ பாடலையும் ’லூசு பெண்ணே’ பாடலையும் பாடி பாலாஜி-ஷிவானி காதலை ஹவுஸ்மேட்ஸ் வெறுப்பேற்றி வந்தாலும், அதனை இருவருமே கண்டு கொள்ளாமல், ரொமான்ஸ் செய்வதும் ரொம்ப ஆர்வமாக உள்ளனர்.

இவர்களின் காதல் குறித்து இந்த வார இறுதியில் கமல் எப்படிப்பட்ட கமெண்ட் கொடுப்பர் உலகநாயகன் என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. அதே போல் கடைசி வரை காதலர்களாக இருப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.