பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பொம்மை செய்யும் டாஸ்க்குக்காக போட்டியாளர்கள் அனைவரும் அடித்து பிடித்து, பொம்மை செய்யும் பொருட்களை எடுப்பதால் பல பிரச்சனைகள் வெடிக்கிறது.

குறிப்பாக ஐஸ்வர்யா அணியினர் வசம் உள்ள ஆரஞ்சு கலர் பெட்டியில் அருகில் யாரும் இல்லாத நேரம், மஹத் சென்று அதில் இருந்த பொருட்களை கொண்டு வந்த போது , ஐஸ்வர்யா மேல் வேகமாக இடித்தார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். 

இந்த சம்பவத்திற்காக மும்தாஜ் மஹத்துக்கு சப்போர்ட் செய்வது போல் பேசியதால், பாலாஜி மும்தாஜை பார்த்து நீங்க ஒரு பொண்ணு தானே, ரித்விக்காவாக இருந்தாலும் சரி, ஐஸ்வர்யாவாக இருந்தாலும் சரி... தப்பு என்றால் தப்புதான் என கூறுகிறார். 

இதற்க்கு மும்தாஜ் ஆமாம், தப்பு தப்புதான்... அதை தான் நானும் சொல்கிறேன் இதற்கு ஏன் கத்துறீங்க என கேள்வி எழுப்புகிறார். உடனே பாலாஜியும் ஐஸ்வர்யா மேல் இடித்தது பற்றி மிகவும் கோவமாக பேசுகிறார். இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் சிறு சண்டை வெடிக்கிறது.