பிக்பாஸ் வீட்டில் அவ்வப்போது அரங்கேறி வரும் டாஸ்க்குகளால் போட்டியாளர்களுக்குள் ஒரு பூகம்பமே வந்து ஓய்கிறது. அந்த வகையில் முதல் புரோமோவில், பிக்பாஸ் போட்டியாளர்கள் இரண்டு அணியாக பிரிந்து, கால் சென்டர் ஊழியர்களாகவும், மற்றொரு அணியினர் அவர்களிடம் கேள்விகளை எழுப்புபவராகவும் விளையாடி வருகிறார்கள்.

அங்கு கேட்கப்பட்ட கேள்விகள் தான் இன்றைய பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது. கேப்ரில்லா மிகவும் கோவமாக நான் எதைப்பற்றியும், எதற்காகவும் உன்னிடம் சொல்லவில்லை என கத்துகிறார். 

பின்னர் பேசும் பாலாஜி ஆக மொத்தத்தில் பழி போட்டு கொண்டே இருக்கணும். என் பெயரை காலி பண்ண நல்ல பழி போட்டீர்கள் என தெரிவிக்கிறார். ஒரு பொண்ணு பெயரை காட்ட சொல்லி எப்படி அழுத்தம் கொடுத்தீர்கள், கேட்டால் நீ சொல்ல மாட்ட என்பதற்காக தான் கேட்டதாகவும் சொல்வதாக தெரிவிக்கிறார்.

இதை தொடர்ந்து இதனை உறுதி படுத்துவது போல் அர்ச்சனாவும் எழுந்து கத்துகிறார்.

பின்னர் பாலாஜி, கேப்ரில்லா மற்றும் அர்ச்சனா அக்கா பெயரையும் நாமினேட் செய்வதாக கூற,  அர்ச்சனா மிகவும் கோவமாக எழுந்து, என்னை அர்ச்சனா என்று மட்டும் கூப்பிடு அர்ச்சனா அக்கா என கூப்பிட வேண்டாம் என கையை நீட்டி பேசுகிறார். மொத்தத்தில் இன்று பிக்பாஸ் வீட்டில் சிறப்பான ஒரு சம்பவம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த விறுவிறுப்பான ப்ரோமோ இதோ...