பல சித்தர்கள் இன்றும் வலம் வரும் புனித இடமாக கருதப்படும் திருவண்ணாமலையில், வாழ்ந்த மூக்கு பொடி சித்தர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காலமானார். 

பல சித்தர்கள் இன்றும் வலம் வரும் புனித இடமாக கருதப்படும் திருவண்ணாமலையில், வாழ்ந்த மூக்கு பொடி சித்தர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காலமானார். 

இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு தன்னுடைய நண்பர்களுடன் வந்து சாமி தரிசனம் செய்த நடிகர் தாடி பாலாஜி பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்... " திருவண்ணாமலைக்கு வந்த போது ஒரு முறை மூக்குப்பொடி சித்தரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் ஆசி பெற்று சென்றேன். அதன் பிறகு என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் நேர்ந்தது. 

அவரின் ஆசி கிடைத்த பின்பு தான் "பிக்பாஸ்" நிகழ்ச்சி வாய்ப்பு கிடைத்து பிரபலமடைத்தேன். தற்போது ஒரு படத்தில் கதாநாயகனாகவும், 2 படத்தில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறேன். மூக்கு பொடி சித்தர் ஜீவசமாதி அடைந்த நாளில் அவரை என்னால் பார்க்க வர முடியவில்லை. எனவே தற்போது அவரது சமாதியை வழிபட தெரிவித்தார்.