காப்பான் படத்தையடுத்து, தற்போது சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை முடித்த பின் பாலாவுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சேது, நந்தா, பிதாமகன் போன்ற படங்களை இயக்கிய பாலா, விக்ரம் மகன் துருவ்வை வைத்து தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியை  ரீமேக் செய்திருந்தார் பாலா. படத்தை பார்த்த தயாரிப்பாளருக்கு திருப்தியடையாததால் குப்பையில் தூக்கி போட்டார்.  பாலாவிற்கு பதில் வேறு ஒரு இயக்குநரை வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் அப்படத்தை எடுத்து முடித்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

ஆனால், படத்தை முதலில் எடுத்த பாலாவின் சினிமா வாழ்க்கை கேள்விக்குறியானது. இதனையடுத்து பல நடிகர்களிடம் முதல் படம் இயக்கும் இயக்குனரைப்போல வாய்ப்பு கேட்டு கெஞ்சி வந்துள்ளார் ஆனால், யாருமே சீண்டுவதாக இல்லை. இந்நிலையில், சூர்யாவிடம் கெஞ்சிய பாலாவிற்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

சூர்யாவும் தொடர்ந்து சறுக்களில் இருந்ததால், பாலாவிடம் கடை கேட்டதாக சொல்லப்படுகிறது. கதையைக் கேட்டு ஓகே சொன்னதால் சூர்யாவும், உடனே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. எனவே, அப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியை பாலா தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தை முடித்த பின்னர் அவர் பாலாவுடன் சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக லைகா தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கும் ஒரு படத்தில் சூர்யா நடிக்கவுள்ளாராம். ஏற்கனவே, பாலாவின் இயக்கத்தில் நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய இரண்டு  படங்களை அடுத்து மூன்றாவது முறையாக பாலாவும், சூர்யாவும் அமைக்கும் இந்த கூட்டணி நிச்சயம் வெற்றி பெரும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.