பல புது படங்கள் வெளிவந்த சில மணி நேரங்களிலேயே இணைய தளங்களில் வெளியாகி, அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.

இப்படி வெளிவராமல் தடுக்க, நடிகர்சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பலர் முயற்சிகள் எடுத்தும் அது தோல்வியில் தான் முடிகிறது.

இந்நிலையில், பொங்கல் வெளியீடாக இன்று வெளியாகியுள்ள பைரவா படம், வெளிவந்த சில மணி நேரங்களிலேயே.... தமிழ் ராக்கர்ஸ், போன்ற சில இணைய  தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.

கபாலி, வேதாளம், தெறி போன்ற படங்கள் இணைய தளத்தில் வெளியான போதிலும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து படத்தை திரை அரங்குகளில் வந்து பார்த்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது.