பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ்  நடித்துள்ள பைரவா படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே விஜய் நடித்த தெறி படத்தின் சாதனையை இது முந்தும் என எதிர்பார்க்க படுகிறது.

இந்நிலையில் 2017 புத்தாண்டை முன்னிட்டு நேற்று இரவு வெளியான ட்ரைலர் தற்போது காட்டு தீ போல ரசிகர்களிடையே வைரலாக பார்க்கபட்டு வருகிறது. 

இப்போது இந்த ட்ரைலரை  20 லட்சத்திற்கும் அதிகமானோர்  பார்த்துள்ளனர். வெளியாகி 24 மணிநேரத்தில் இது இன்னும் இரட்டிப்பாகவேண்டும் என்பது ரசிகர்களின் ஆவல்.

தற்போது இதன் லைக்ஸ் சாதனை நேரப்படி கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

25K - 13 Mins
50K - 25 Mins
75K - 50 Mins
100K - 100 Mins
125K - 6 Hrs
150K - 13 Hrs

இதன் மூலம் கண்டிப்பாக அட்லீயை முந்திவிடுவார் பரதன் என கணித்துள்ளனர் நெட்டிசன்கள்.