இயக்குனர் பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய், மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பைரவா படத்தின் படப்பிடிப்புகள் வெற்றிகரமாக நடத்தி முடிந்துவிட்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தை 2017 ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதால் தற்போது படத்துக்கான எடிட்டிங், டப்பிங் மற்றும் மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடத்த படக்குழு திட்டமிட்டனர், ஆனால் இளையதளபதியோ வேண்டாம் என மறுத்து இணையத்தளத்தினுள் வெளியிடுங்கள் போதும் என சொல்லிவிட்டாராம்.

அவர் இப்படி சொன்னதற்கு சில கருப்பு பண சூழ்நிலைகளேளும் காரணம் என்று சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிக்கும் 2.௦ படத்தின் முதல் பார்வைக்கே மும்பையில் பெரிய விழா நடைபெறும் போது, பைரவா இசை வெளியீட்டு விழாவை நடத்தாதது படக்குழுவிற்கு சற்று வருத்தமாம்.