விஜய் தற்போது பிசியாக பைரவா படத்தில் நடித்து வருகிறார். பரதன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய் இரண்டு வேடத்தில் நடிப்பதாக சொல்ல படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

விஜய் ஜோடியாக முன்னணி நாயகியாக வளர்த்து வரும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

மேலும், டேனியல் பாலாஜி, ஸ்ரீமன், ஜெகபதி பாபு, ஹரிஷ் உத்தமன், பேபி மோனிகா, சதிஷ், அபர்ணா வினோத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.s

இந்நிலையில், தற்போது இன்னொரு நடிகையும் இப்படத்தில் இணையவிருக்கிறார்.

இவர் ஏற்கனவே ‘கோழிக்கூவுது’, ‘மாதவனும் மலர்விழியும்’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்த சிஜா ரோஸ்.

சமீபத்தில் வெளிவந்த விஜய் சேதுபதி நடித்த ‘றெக்க’ படத்தில் அவருக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.