இயக்குனர் பரதன் இயக்கத்தில் தயாராகி வரும் விஜய்யின் பைரவா படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு வேலைகளும் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நவம்பர் 10ம் தேதி முடிய இருக்கிறதாம்.
சின்ன சின்ன காட்சிகள் மட்டும் தான் எடுக்க வேண்டுமாம். அதோடு படம் கண்டிப்பாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கூறியுள்ளார் இயக்குனர் பரதன்.
தற்போது விஜய்யின் பைரவா படத்தின் டீஸர்ரே 5 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்து என்பது குறிப்பிடத்தக்கது.
