bahubali triler release date conformed

இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு இருந்த எதிர்பார்ப்பை விட இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் 'பாகுபலி 2' படத்திற்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சியை இங்கிலாந்து ராணி எலிசபெத், பிரதமர் மோடி போன்ற விவிஐபிகளுக்கு திரையிடும் அளவுக்கு இந்த படம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கட்டப்பா ஏன் 'பாகுபலி'யை கொன்றார்...? அதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள அணைத்து ரசிகர்களும் இந்த படத்தை பார்ப்பார்கள் என்பதால் இந்த படத்தின் வசூல் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

இந்த படத்தின் டிரைலர் இம்மாதம் 16ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டிரைலர் திரையங்குகள் மற்றும் யூடியூப் இணையதளம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்துள்ளனர்.