Bahubali shooting spot open for public visiting

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த பாகுபலி 2 திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையே திரும்பிப்பார்க்க செய்தது.

இந்த படத்திற்காக பல கோடி செலவில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் மிகவும் பிரமாண்டமாக வரலாற்று சிறப்பு வாய்ந்தது போலவே, 'மகிழ்மதி கோட்டை', 'தேர்', 'போர் படை' மற்றும் பல்வேறு பொருட்களை கலை இயக்குனர் சாபுசிரில் மிகவும் துல்லியமாக வடிவமைத்திருந்தார்.

இந்த அனைத்து செட்டுகளும், படப்பிடிப்பு முடிந்த பிறகும் கலைக்கப்படாமல் அப்படியே இருந்தது. இத்தனை நாட்கள் பூட்டியே கிடந்த இந்த இடத்தை, தற்போது பொது மக்கள் பார்வையிட அனுமதி கொடுத்துள்ளனர் ராமோஜி பிலிம் சிட்டி உரிமையாளர்கள்.

இதன் மூலம் படத்தில் வியந்து பார்த்த 'ராணாவின் மிக பெரிய சிலை', 'பிளேடு ரத்தம்', 'போர் கருவிகள்', 'யானைகள்' என அனைத்தையும் பொதுமக்கள் நேரில் பார்த்து ரசித்து வருகின்றனர்.