bahubali producers bought mersal
விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் கேரள உரிமையை குளோபல் மீடியா நிறுவனம் வாங்கியுள்ளது.
நடிகர் விஜய்க்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். கேரள முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் விஜய் படம் கேரளாவில் 200 தியேட்டர்களுக்கு குறையாமல் ரிலீஸாகும். நம் தமிழ் ரசிகர்களுக்கு இணையாக கட் அவுட் வைப்பது, சுவர் விளம்பரம், பேருந்து விளம்பரம் என களை கட்டும்.
விஜய் படங்களின் கேரள உரிமையை கைப்பற்ற அங்கேயும் சில நிறுவனங்களுக்குள் போட்டி நிலவும். அந்த வகையில் அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துவரும் ‘மெர்சல்’ படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை குளோபல் மீடியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த நிறுவனம் தான் ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களையும் கேரளாவில் வெளியிட்டு அதிக லாபத்தை சம்பாதித்துள்ளது.
‘மெர்சல்’ தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுவரை விஜய் படங்கள் கேரளாவில் விற்பனையானதை விட மிகப்பெரிய தொகையை கொடுத்து குளோபல் மீடியா வாங்கியுள்ளது என்பது கொசுறு தகவல்.
