bahubali movie scene cut
பாகுபலி 2 மூன்று வாரத்தை கடத்தும், பாக்ஸ் ஆபீஸ் குறைவில்லாமல் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பாகுபலி 2 படத்தின் தமிழ் பதிப்பில் மட்டும் ஒரு காட்சியை சென்சார் குழுவினர் கட் செய்துவிட்டார்களாம். தற்போது , எந்த காட்சியை கட் செய்தனர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பிரபாஸ், அனுஷ்கா இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பார்கள், இவை தமிழில் கட் செய்து வெளியிட்டுள்ளனர்.
ஆனால், மற்ற பதிப்புக்களில் இந்த காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த காட்சியை கட் செய்தும் படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்கவில்லை. யு/ எ சான்றிதழ் தான் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
