'பாகுபலி' திரைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த திரையுலகையே தென்னிந்திய திரையுலகின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்.  இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி.  

இரண்டு பாகங்களாக வெளியான இந்த திரைப்படம், 250 கோடியில் தயாரிக்கப்பட்டு, 1800 கோடி வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில், தெலுங்கு நடிகர் பிரபாஸ், கதாநாயகனாக நடித்திருந்தார். நடிகை அனுஷ்கா மற்றும் தமன்னா ஆகியோர் கதாநாயகியாக நடித்திருந்தார். 

நடிகர் ராணா, அதிரடி வில்லனாக நடித்திருந்தார். மேலும் ரம்யா கிருஷ்ணா, சத்யராஜ், நாசர், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த படம் நேற்று லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்த திரையரங்கின் ஹாலில் மட்டும் 5267 பேர் அமர்ந்து படம் பார்க்கும் அளவிற்கு பிரமாண்டாக உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கு திரையிடப்பட்ட முதல் இந்திய படம் என்கிற பெருமையை மட்டுமின்றி ஆங்கிலம் அல்லாத வேறொரு மொழி திரையிடப்படுவதும் என்கிற பெருமையையும் பாகுபலி பெற்றுள்ளது. இந்த பிரமாண்ட ஹாலில் பாகுபலி படத்தை கண்டு ரசிக்க, நடிகை அனுஷ்கா, ராஜமௌலி, ராணா, கீரவாணி, பிரபாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு லண்டனில் இந்த படத்தை பார்த்தனர்.