bahubali movie issue

பாகுபலி 2 திரைப்படம் வெளிவந்து உலக அளவில் 1500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த படத்தை இணையதளங்களில் விடாமலும், திருட்டு விசிடி போட்டு யாரும் வெளியிடாமல் தடுக்க படக்குழுவினர் மிகவும் எச்சரிக்கையாக இருந்த நிலையம் ஒரு சில இணையதளங்களில் இத திரைப்படம் எப்படியோ வெளிவந்த நிலையிலும் மூன்றாவது வாரத்திலும் கொஞ்சமும் குறைவில்லாமல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் 6 பேர் கொண்ட கும்பல் பட தயாரிப்பாளரை சந்தித்து, தங்களிடம் மிகவும் தெளிவான பாகுபாலி பிரிண்ட் இருப்பதாகவும், அதனை போட்டு காண்பித்துள்ளார் , மேலும் தங்களிடம் 15 லட்சம் கொடுத்தால் இதனை இணையத்தளத்தில் வெளியிட மாட்டோம், இல்லை என்றால் வெளியிடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர்.

சுதாரித்து கொண்ட தயாரிப்பாளர் இந்த தகவலை போலீசாரிடம் தெரிவிக்கவே போலீசார் அவர்கள் 6 பேரை கைது செய்துள்ளனர் . தயாரிப்பாளரிடமே படத்தை போட்டு காண்பித்து மிரட்டிய சம்பவம் திரையுலகில் கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.