தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் பாகுபலி 2 . இதன் முதல் பாகம் வெளியாகி சரமாரியான சாதனைகளை முறியடித்த நிலையில், இரண்டாம் பாகம் அதே விறுவிறுப்போடு தயாரானது. பிரபாஸ், தமன்னா, ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் இந்திய சினிமாவையும் கடந்து உலக சினிமாவையே டோலிவுட்டை நோக்கி திரும்பி பார்க்க வைத்தது. 

இதையும் படிங்க: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படுமோசமான வீக்னஸ்... வெளிச்சத்திற்கு வந்த விவகாரம்...!

உலக அளவிலான பாக்ஸ் ஆபிஸில் கிட்டத்தட்ட 1,810 கோடி வரை வசூல் செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சமீபத்தில் கூட ந்த படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சோசியல் மீடியாவில் பலரும் கொண்டாடி வருகின்றனர். பாகுபலியின் பிரம்மாண்ட சாம்ராஜ்யத்தை நினைவு கூறும் விதமாக #3YearsforHistoricBaahubali என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். இந்தியாவில் பரந்து விரிந்து சாதனை படைத்த மகிழ்மதி சாம்ராஜ்யம் தற்போது ரஷ்யாவில் கொடி கட்டி பறக்கிறது. 

இதையும் படிங்க: ஆபாச படம் பார்த்த தமன்னா... ஜாலிக்காக நண்பர் வீட்டில் செய்த கேவலமான வேலை... வைரலாகும் வீடியோ...!

லண்டன் ஆல்பர்ட் தியேட்டர் தொடங்கப்பட்ட 148 ஆண்டுகளில் ஆங்கில மொழிப்படங்களை தவிர பிற மொழி படங்களை ஒளிபரப்பியது கிடையாது. அந்த சாதனையை முதன் முறையாக பாகுபலி திரைப்படம் முறியடித்தது. லண்டனி ஒளிபரப்பான முதல் இந்தியப் படம் என்ற சாதனையையும் படைத்தது. ஆங்கில சப்டைட்டிலுடன் ஒளிபரப்பப்பட்ட அந்த திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்படி உலகம் முழுவதும் வசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் யாருமே முறியடிக்க முடியாத அளவிற்கு எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளது. 

இதையும் படிங்க: “இதுக்கு புடவையே கட்டியிருக்க வேண்டாம்”...சாக்‌ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சியை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்!

தற்போது அந்த வரிசையில் ரஷ்யாவில் பாகுபலி 2 திரைப்படம் செய்துள்ள மாபெரும் சாதனை படக்குழுவினரை பெருமை கொள்ள செய்துள்ளது. ஆம்... பாகுபலி 2 திரைப்படத்தை ரஷ்ய மொழியில் டப் செய்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பியுள்ளனர். அந்த வீடியோவை இந்தியாவின் ரஷ்ய தூதரக அதிகாரிகள் எடிட் செய்து அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அத்துடன் இந்திய சினிமா ரஷ்யாவிலும் பிரபலமடைந்து வருகிறது. ரஷ்ய தொலைக்காட்சியில் தற்போது என்ன ஒளிபரப்பாகிறது பாருங்கள்... பாகுபலி திரைப்படம் ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது என்று பதிவிட்டுள்ளனர்.