பாகுபலி நாயகனின் 25-வது திரைப்படம்…! பிரமாண்டமாக தயாராகும் படத்தின் முக்கிய அறிவிப்பு..!
பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரபாஸின் 25-வது திரைப்படத்தின் அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரபாஸின் 25-வது திரைப்படத்தின் அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
ராஜமெளலி இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக வெளியான பாகுபலி படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ரசிகரளை பெற்றவர் பிரபாஸ். இவர் அடுத்து ஹாலிவுட் மேக்கிங் போல நடித்த சாஹோ எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்களின் பேரண்பு குறைந்தபாடில்லை. இந்தநிலையில் பிரபாஸ் நடிக்கும் 25-வது படத்தின் அறிவிப்புக்காக தமிழ், தெலுங்கு என அனைத்து மொழி ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்தநிலையில் பிரபாஸின் 25-வது படமும் மிக பிரம்மாண்டமாக உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய கதைக்களத்தில் பிரபாஸ் நடிக்கும் பிரம்மாண்ட படத்தின் அறிவிப்பு வரும் 7-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் அறிவிப்பு குறித்த அறிவிப்பையே அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.