bahubali 2 teem attacked in emraid flight

மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள 'பாகுபலி 2 ' திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், தீவிரம் காட்டி வருகின்றனர் படக்குழுவினர்.

சமீபத்தில் எமிரேட்ஸ் விமானத்தில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக இயக்குனர் 'எஸ்.எஸ்.ராஜமௌலி', நடிகர் 'பிரபாஸ்', நடிகை 'அனுஷ்கா', தயாரிப்பாளர் 'சோபு யர்லகடா ''உள்ளிட்ட 5 பேர் துபாய் சென்றுள்ளனர்.

அவர்களை விமானத்திலேயே தாக்கும் விதத்தில் விமான ஊழியர் ஒருவர் நடந்து கொண்டதாக தயாரிப்பாளர் தற்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், விமானத்தில் பணிபுரிந்த அதிகாரி இனவெறியோடு தங்களை தக்க வந்ததாகவும், சாதாரணமாக நடந்து கொள்வது போல் கைகளால் ஓங்கி அடித்தும், கால்களை மிதித்தும் இனவெறியோடு தாக்கியதாக கூறியுள்ளார்.

மேலும் இதுவரை நான் பலமுறை 'எமிரேட்ஸ்' விமானத்தில் பயணம் செய்துள்ளேன் ஆனால், ஒரு முறை கூட இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை. ஆனால் தங்களுக்கு விமானத்திலேயே இனவெறி தாக்குதல் நடந்தது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும், இது கண்டிக்கத்தக்க செயல் என்றும் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.