bahubali 2 show cancel
பிரபல பாலிவுட் நடிகரும், அரசியல்வாதியுமான வினோத் கண்ணா இன்று புற்றுநோய் காரணமாக மும்பை மருத்துவமனையில் மரணமடைந்தார், அவருக்கு வயது 70 .
இந்நிலையில் இவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மும்பையில் இன்று இரவு 8 : 30 மணிக்கு திரையிடப்படுவதாக இருந்த "பாகுபலி 2 " படத்தின் பிரத்யேக காட்சியை கேன்சல் செய்துள்ளனர் படக்குழுவினர்.
இது குறித்து "பாகுபலி 2 " திரைப்படத்தின் இந்தி விநியோகிஸ்தர் உரிமையை கைப்பற்றியுள்ள 'கரண் ஜோஹர்" மற்றும் படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் .
மறைந்த நடிகர் "வினோத் கண்ணாவிற்கு" இரங்கல் தெரிவிக்கும் விதமாக பாகுபலி 2 படத்தின் பிரத்யேக காட்சி ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
