தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் பாகுபலி 2 . இதன் முதல் பாகம் வெளியாகி சரமாரியான சாதனைகளை முறியடித்த நிலையில், இரண்டாம் பாகம் அதே விறுவிறுப்போடு தயாரானது. பிரபாஸ், தமன்னா, ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் இந்திய சினிமாவையும் கடந்து உலக அளவில் ஏராளமான சாதனைகளை படைத்தது. உலக அளவிலான பாக்ஸ் ஆபிஸில் கிட்டத்தட்ட ஆயிரத்து 810 கோடி வரை வசூல் செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

இதையும் படிங்க: இந்துக்கள் என்ன இளிச்சவாய்களா?... ஜோதிகாவிற்கு சப்போர்ட் செய்த சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!


தற்போது இந்த படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சோசியல் மீடியாவில் பலரும் கொண்டாடி வருகின்றனர். பாகுபலியின் பிரம்மாண்ட சாம்ராஜ்யத்தை நினைவு கூறும் விதமாக #3YearsforHistoricBaahubali என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளைச் சேர்ந்த அனைத்து ரசிகர்களும் பாகுபலியை பாராட்டி ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர்.  

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

இந்நிலையில், “இந்தப் படத்தில் நடித்த அனுபவங்கள் அப்படத்தின் நாயகனான பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பாகுபலி இந்திய தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல, என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமும் கூட. மேலும் பாகுபலி 2 மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த தருணத்தில், அதை மறக்க முடியாத படமாக மாற்றிய ரசிகர்கள், படக்குழுவினர் மற்றும் இயக்குநர் ராஜமெளலிக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் என் மீது அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும், எனக்கு வாய்ப்பளித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து மகிழ்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.