bahubali 2 chennai updates

உலக மக்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட "பாகுபலி 2" திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.

துபாய், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் நேற்று இரவே ரசிகர்களுக்காக சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.

பொதுவாக பலராலும் எதிர்பார்க்கப்படும் ஒரு திரைப்படத்தை, மாஸ் ஓப்பனிங் கொடுத்து ரசிகர்கள் வரவேற்பது வழக்கம். 

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள "பாகுபலி 2 ' திரைப்படம், ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், பெரிய அளவில் போஸ்டர், ப்ளக்ஸ், பட்டாசு, மேளம் தாளம் என எதுவுமே இல்லாமல் வெளியாகியுள்ளதால் சாதாரண திரைப்படம் வெளியானது போலவே திரையரங்கங்கள் காட்சியளிக்கிறது.

அதே போல மிக பிரமாண்ட படமான இந்த படத்திற்கு, பிரீமியர் காட்சி, பத்திரிகையாளர்கள் சிறப்பு காட்சி, ரசிகர்கள் சிறப்பு காட்சி என எதுவும் சென்னையில் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.