bahubali 2 across 1500 crore
இயக்குனர் ராஜமௌலி, இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த பாகுபலி 2 படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு சிறிதும் ஏமாற்றம் அளிக்காத வகையில் பாகுபலி திரைப்படம் நான்கு வாரங்களை கடந்தும், சென்னை உள்ளிட்ட பல்வேறு தமிழக மாவட்டங்களிலும், அமெரிக்கா, பாகிஸ்தான், சிங்கப்பூர், மலேசிய போன்ற வெளிநாடுகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பாகுபலி திரைப்படம் 1500 கோடியை எட்டியுள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியை அறிந்த பல பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் பாகுபலி 2 படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை, ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
