BAFTA Awards 2025: பாஃப்டா விழாவில் விருதுகளை தட்டிதூக்கிய படங்கள் என்னென்ன? முழு பட்டியல் இதோ

BAFTA Awards 2025 Full Winners List : லண்டனில் நடைபெற்ற BAFTA 2025 விருது விழாவில், 'கான்க்லேவ்' மற்றும் 'தி புருடலிஸ்ட்' தலா 4 விருதுகளை வென்றன. முழு விருது பட்டியலை பார்க்கலாம்.

BAFTA Film Awards 2025 Full Winners List in tamil gan

BAFTA திரைப்பட விருதுகள் 2025: சினிமா உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதான பாஃப்டா (பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள்) 2025 விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெற்றது. லண்டனின் ராயல் ஃபெஸ்டிவல் ஹாலில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. டேவிட் டென்னன்ட் இந்த விழாவை தொகுத்து வழங்கினார். 

இந்த விருது விழாவில் வாடிகன் நாடகத் திரைப்படம் 'கான்க்லேவ்' நான்கு விருதுகளை வென்றது, இதில் சிறந்த படம் மற்றும் சிறந்த பிரிட்டிஷ் திரைப்படம் ஆகிய விருதுகள் அடங்கும். பாயல் கபாடியாவின் 'ஆல் வீ இமேஜின் ஆஸ் லைட்' திரைப்படம் விருதைத் தவறவிட்டது. சிறந்த ஆங்கிலம் அல்லாத மொழிப் பிரிவில் பாயலின் படம் பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் அது ஸ்பானிஷ் மொழி படமான 'எமிலியா பெரெஸ்' படத்திடம் தோற்றது. 

இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயனை பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக உயர்த்திய டாப் 5 படங்கள் லிஸ்ட்

BAFTA Film Awards 2025 Full Winners List in tamil gan

பாஃப்டா விருது வென்றவர்களின் முழுப் பட்டியல் இதோ... 

சிறந்த படம் - கான்க்லேவ்

சிறந்த பிரிட்டிஷ் திரைப்படம் - கான்க்லேவ்

சிறந்த இயக்குனர் - பிராடி கோர்பெட், தி புருடலிஸ்ட்

சிறந்த நடிகர் - அட்ரியன் பிராடி, தி புருடலிஸ்ட்

சிறந்த நடிகை - மிக்கி மேடிசன், எனோரா

சிறந்த துணை நடிகர் - கீரன் கல்கின், எ ரியல் பெய்ன்

சிறந்த துணை நடிகை - ஜோ சால்டனா, எமிலியா பெரெஸ்

ரைசிங் ஸ்டார் விருது (மக்களால் வாக்களிக்கப்பட்டது) - டேவிட் ஜான்சன்

சிறந்த பிரிட்டிஷ் அறிமுகம் - நைக்அப் இயக்குனர் ரிச் பெப்பியட்

சிறந்த அசல் திரைக்கதை - ஜெஸ்ஸி ஐசன்பெர்க், எ ரியல் பெய்ன்

சிறந்த தழுவல் திரைக்கதை - பீட்டர் ஸ்ட்ரோஹன், கான்க்லேவ்

சிறந்த ஆங்கிலம் அல்லாத படம் - எமிலியா பெரெஸ்

சிறந்த இசை - டேனியல் ப்ளம்பெர்க், தி புருடலிஸ்ட்

சிறந்த ஒளிப்பதிவு - லோல் க்ராலி, தி புருடலிஸ்ட்

சிறந்த படத்தொகுப்பு - கான்க்லேவ்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - விக்கெட்

சிறந்த உடை வடிவமைப்பு - விக்கெட்

சிறந்த ஒலி - ட்யூன்: பகுதி 2

சிறந்த நடிகர்கள் தேர்வு - எனோரா

சிறந்த காட்சி விளைவுகள் - ட்யூன்: பகுதி 2

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - தி சப்ஸ்டன்ஸ்

சிறந்த அனிமேஷன் படம் - வாலஸ் மற்றும் க்ரோமிட்: வெஞ்சன்ஸ் மோஸ்ட் ஃபவுல்

சிறந்த பிரிட்டிஷ் குறும்படம் - ராக், பேப்பர், சிசர்

சிறந்த பிரிட்டிஷ் அனிமேஷன் குறும்படம்- வான்டர் டு வான்டர்

சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பப் படம் - வாலஸ் மற்றும் க்ரோமிட்: வெஞ்சன்ஸ் மோஸ்ட் ஃபவுல்

சிறந்த ஆவணப்படம் - சூப்பர் மேன்: தி கிறிஸ்டோபர் ரீவ் ஸ்டோரி

பாஃப்டா பெல்லோஷிப் - வார்விக் டேவிஸ்

அசல் இசை : தி புருடலிஸ்ட்

தயாரிப்பு வடிவமைப்பு : விக்கெட்

யார் அதிக விருதுகளை வென்றார்கள்

78வது பாஃப்டாவில் எந்த ஒரு குறிப்பிட்ட படமும் ஆதிக்கம் செலுத்தவில்லை. இருப்பினும், 'கான்க்லேவ்' சிறந்த படம், சிறந்த பிரிட்டிஷ் படம், சிறந்த தழுவல் திரைக்கதை மற்றும் சிறந்த படத்தொகுப்பு ஆகிய நான்கு விருதுகளை வென்றது. அதேபோல், 'தி புருடலிஸ்ட்' திரைப்படமும் நான்கு பாஃப்டா விருதுகளை வென்றது.

இதையும் படியுங்கள்... கோலிவுட்டின் ‘ஹிட்’மேன் சிவகார்த்திகேயன்; இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios